About Dr. G. Sivaraman

Dr. G. Sivaraman B.S.M.S., Ph.D., the Managing Director and Chief Siddha Physician of the Arogya Healthcare, is a graduate from Govt Siddha Medical College and Doctorate from Tamil University. Started his carrier as residential Siddha Doctor in 18 Siddhar Siddha Hospital at Annanagar, Chennai in the year 1993. He started his own clinic Arogya Siddha Hospital in the year 1995. Incorporated as Pvt Ltd Company in the year 1997 Arogya has grown in many faces. Dr. Sivaraman is now

Member of Scientific Advisor Committee and I.E.C of National Institute of Siddha, Sanitorium – Chennai, and ASUDTAM, Member -Working Group of AYUSH, Planning commission of Govt of India, Member- TKDL Expert group and many key committees of Siddha research.

GURUSAMY VELAMMAL – Mother of Dr.G.SIvaraman, Graduate from St.mary’s college, Tuticorin.Has abundant knowledge of traditional functional foods and recipes.

சித்த மருத்துவத்தில் பட்டமும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சித்தமருத்துவராகப் பணியாற்றி வருகிறார். சென்னையின் ஆரோக்கியா சித்த மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனராக இருக்கிறார். சித்த மருத்துவத்தை அறிவியல் பார்வையுடன் தர நிர்ணயம் செய்து, அதன் பயனை உலகெங்கும் பரவலாக்கியதிலும், உலகெங்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தமிழ் மருத்துவமுறையாக நகர்த்தியமைக்கும் பெரும்பங்கு வகித்தவர். 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணித்து இம்மருத்துவ முறையை பிரபலப்படுத்தியவர். நிலவேம்பின் பயனை அரசுக்கு முதன்முதலில் எடுத்துச் சொன்னமைக்கும், எச்ஐவி நோய்க்கான கூட்டு சிகிச்சையிலும் மறைந்த பேரா.செ நெ தெய்வனாயகத்துடன் தொடர்ந்து பணியாற்றியவர்.கோவிட் முதலாம் அலையில் தமிழக அரசில் உருவாக்கப்பட்ட, கோவிட் நோய்த்தடுப்புக்கான சிறப்பு task force committee இல் இடம்பெற்று கபசுரக் குடினீரின் பயன்பாட்டை அரசுக்கு பரிந்துரைத்தவர்.

15 ஆண்டுகளுக்கு மேலாக சிறுதானியங்களின் ஊட்டம் குறித்த பயன்பாட்டை, அதன் சூழலுக்கு இசைவான உழவு குறித்த பயனை, உலகெங்கும் பல தளங்களில் உரையாடி, வெகுசன ஊடகங்களில் கட்டுரைகளாகவும், காட்சி ஊடகங்களில் தெளிவுற உரைத்தும் இன்றும் சிறுதானியப் பயன்பாட்டை பெரிதும் உயர்த்தியதில், இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

துரித உணவுகளின் நச்சுத்தனமைக்கு எதிரான இவரது பிரச்சாரம் தமிழ் மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. 1,75,000 கல்லூரி மாணாக்கர்களிடையே தமிழ் உணவு வாழ்வியல் குறித்து இவரது உரையாடல், முக்கிய நல நகர்வை தமிழ்மக்களிடம் எற்படுத்தியது. இயற்கை வேளாண்மையின் அவசியத்தை அன்று மறைந்த நம்மாழ்வார் ஐயாவுடன் இணைந்து வலியுறுத்தியும், இன்றுவரை அதில் தொடர்ந்து பணி செய்தும் வருபவர். மரபணு மாற்றப்பயிர்களின் தீங்கை, மாநில மத்திய அரசுக்கு எடுத்துச் சென்று பிடி கத்தரியை தடை செய்தமைக்கு முழுமையாக போராடியவர்.

மிகச் சிறந்த எழுத்தாளர். மேடைப் பேச்சாளர் , சூழலியலாளர். 25க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் எழுதியவர். இவர் எழுதிய தமிழ் நூல் ” ஆறாம் திணை” உலகப் பிரசித்தி பெற்றது. பெரும் மாற்றத்தை உணவுவழக்கத்தில் தமிழகத்தில் ஏற்படுத்தியது. “வாங்க வாழலாம்”- இவர் எழுதிய நூல், தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்ற நூல். இவை தவிர 200க்கும் மேலான சித்த மருத்துவ அறிவியல் உரைகளை உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் கருத்தரங்குகளில் ஆற்றியுள்ளார்.

ஆனந்த விகடனின் “தமிழ் நாட்டின் டாப் 10 மனிதர்” விருது, சிறந்த எழுத்தாளர்க்கான “சுஜாதா விருது” , எம்ஜி ஆர் மருத்துவப் பல்கலைக்கழக “சிறந்த மருத்துவர் விருது”, அமெரிக்காவின் ஃபெட்னா அமைப்பின் விருது,. 2021 ஆண்டில் கனடா நாட்டு தமிழ்ச்சங்கத்தின் “தமிழ் மரபுக்காலவலர் விருது” என பல விருதுகள் பெற்றவர்.

கோவிட் 19 நோய் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்கான தமிழக அரசின் உயர்மட்டக் குழுவில் பங்கெடுத்து கபசுரக் குடிநீரை அரசு மூலமும், பொதுமக்கள் மூலமும் உலகெங்கும் பரவலாக்கியவர். தற்போது தமிழக அரசின் முதலமைச்சர் தலைமையில் இயங்கும் உயர்மட்டக்குழுவான அரசு திட்டக்குழுவின் உறுப்பினர்.

சென்னை முகப்பேரில் ஆரோக்யா ஹெல்த் கேர் பிரைவேட் லிமிடட் நிறுவனம் மூலம் தமிழகத்தில் ஆறு சித்த மருத்துவமனைகளை நடத்தி வருகின்றார். ஆயுஷ் துறையின் பதிவு பெற்ற சித்த மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தமிழகத்தில் நடத்தி வருகின்றார். 12 மருத்துவர்களுடன் இயங்கும் இவர் சித்த மருத்துவமனை மத்திய அரசின் தர நிர்ணய அங்கீகாரமான NABH (entry level) பதிவு பெற்ற தமிழகத்தின் சிறந்த சித்த மருத்துவமனைகளுள் ஒன்று. சர்க்கரை நோய் மாரடைப்பு புற்று நோய்கள் முதலான தொற்றாத வாழ்வியல் நோய்கட்கு துல்லியமான சித்த மருத்துவ மூலிகை சிகிச்சையுடன் கூடிய ஒருங்கிணைந்த மருத்துவம், அறிவியல் தரவுகளுடன் கூடிய மூலிகை மருந்துகள் உற்பத்தி மற்றும் அவற்றை உலகெங்கும் சந்தைப்படுத்துதல் ஆகிய கனவுகளை சுமந்து இயங்கி வருகின்றார்.